Skip to content

புதிய வழித்தடத்தில் பேருந்துகள்… அரியலூர் மாவட்டத்தில்அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலத்தின் சார்பில் போக்குவரத்து பேருந்து சேவையினை நீட்டிப்பு செய்து, கூடுதல் நடை பேருந்துகளை துவக்கி வைத்து, புதிய வழிதடத்தில் பேருந்து சேவையினை இன்று (13.01.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டல பொது மேலாளர் ஆ.முத்துக்கிருஷ்ணன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி.

ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன் (திருமானூர்), பொய்யாமொழி (தா.பழூர்), பிரபாகரன் (செந்துறை), ஜாகிர் உசைன் (செந்துறை), தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!