Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை சிறுமி வன்கொடுமை வழக்கில்-2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கோவை, சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதியின் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே ஒரு கிராமத்தில் மே 21 கடைக்கு சென்ற 10 வயது சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்பட்டது.அதனால், பதற்றமடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, மாயமான சிறுமி நேற்று மாலை உடலில் காயங்களுடன் கண்ணம்பாளையம் குளக்கரை அருகே முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார்.இதற்கிடையே, போலீசாரின் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தான் சிறுமியை கடத்தி, கொலை செய்தார் என்பது தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும், கைதான கார்த்திக் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!