Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தம்பதி தற்கொலை முயற்சி – மனைவி சாவு- திருச்சி க்ரைம்

தொழிலில் நஷ்டம் .. தற்கொலை முயற்சி

திருச்சி கன்டோன்மென்ட் வில்லியம்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் 83 இவரது இரண்டாவது மகள் ஜனத் கிறிஸ்டி (41) இவர் பாலமுருகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்னையில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் ஏசுதாஸும் ஜனத்தும் பேச்சுவார்த்தையின்றி இருந்து வந்தனர். ஏசுதாஸ் திருச்சி கே கே நகர் பகுதியில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் இருந்து வந்தார் இந்த நிலையில் கடந்த 30ம் தேதி ஜனத் மற்றும் அவரது கணவன் பாலமுருகன் ஆகியோர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில்
உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த தம்பதி அங்கு கடந்த 5ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இது குறித்து தகவல் தெரிந்த விடுதி பணியாளர்கள் இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜனத் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மேலும் பாலமுருகன் சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து கண்ட்டோன்மென்ட் போலீசார்
வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரியில் இருந்து தவறி விழுந்த மேற்கு வங்க தொழிலாளி சாவு

திருச்சியில் லாரியிலிருந்து கீழே விழுந்த மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மேற்குவங்க மாநிலம் மீட்னாபுரி குல்டிகிரி பகுதியை சேர்ந்தவர் சீதாராம் 45 இவர் பொன் நகர் பகுதியில் உள்ள ஒரு டைல்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்தார் இந்நிலையில் நேற்று வேலை முடிந்து கம்பெனி வாகனமான லோடு லாரியில் வீட்டிற்கு சென்றார்க லாரியை கேகே நகர் உடையான் பட்டியை சேர்ந்த சேகர் 67 என்ற முதியவர் ஓட்டினார் லாரி பொன் நகர் பகுதியை கடந்த போது ஒரு வேகத்தடை மீது ஏறி இறங்கியது அப்போதுசீதாராமன் லாரியில் இருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்தார் இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் இது குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

போலி பாஸ்போர்ட்டில் வந்த பயண கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜசீலன் 57 இவர் கடந்த ஒன்பதாம் தேதி சிங்கப்பூர் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார் அங்கு இமிகிரேஷன் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில்
அவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது தொடர்ந்து ஏர்போர்ட் போலீசார் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!