Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் நடன நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து நடனக்கலைஞர் பலி

கரூர் நடன நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து நடனக்கலைஞர் பலி

கரூர் அருகே கோவில் திருவிழாவில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியின்போது, மேடையிலேயே திடீரென மயங்கி விழுந்த நடனக் கலைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தபோதே அவர் சரிந்து விழுந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

கரூர் மாவட்டம், மணவாசி பகுதியைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஜீவா, கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடனமாடி வந்தார். இந்நிலையில், கரூர் அருகே தொழில்பேட்டை பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இரவு நடந்த நடன நிகழ்ச்சியில் குழுவுடன் இணைந்து கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி மேடையிலேயே கீழே சரிந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

முதற்கட்ட தகவலின்படி, அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு மேடைகளில் தனது நடனத் திறமையால் ரசிகர்களை கவர்ந்த ஜீவாவின் திடீர் மறைவு, நடனக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!