நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கும் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இது துருவின் நான்காவது படமாகும். இதற்கு முன்பு வெளியான ‘பைசன்’ திரைப்படம் உலகளவில் ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்து, துருவின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. இந்தப் படத்தில் பிருத்வி பாண்டியராஜ், சாய் தீனா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ருக்மணி வசந்த், ஸ்ரீலீலா நாயகிகளாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
துருவ் விக்ரம் புதிய பட பூஜை:மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு
