Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெங்களூர்-சுவிட்சர்லாந்திற்கு அக்டோபர் முதல் நேரடி விமானசேவை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஐரோப்பாவின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வரும் அக்டோபர் மாதம் முதல் புதிய நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

இதன் மூலம், தென் இந்திய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் இனி சுவிட்சர்லாந்து செல்ல டெல்லி அல்லது மும்பை போன்ற நகரங்களுக்குச் சென்று மாற வேண்டிய அவசியமிருக்காது.

சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனமான “சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ்” (SWISS) இந்த நேரடி விமான சேவையை வழங்க முன்வந்துள்ளது.

பயண வழித்தடம் (Route) பெங்களூரு (BLR) கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுவிட்சர்லாந்தின் சூரிக் (ZRH) சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த விமானங்கள் நேரடியாக இயக்கப்படும். வாரத்திற்கு எத்தனை நாட்கள் இந்த சேவை வழங்கப்படும் என்பது குறித்த இறுதிப் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

பயணிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள் நேர விரயம் தவிப்பு: இதுவரை தென் இந்தியாவில் இருந்து சுவிட்சர்லாந்து செல்ல 13 முதல் 15 மணி நேரம் (Connecting Flights மூலம்) ஆகி வந்த நிலையில், இந்த நேரடி விமான சேவை மூலம் பயண நேரம் சுமார் 8 முதல் 9 மணி நேரமாகக் குறையும். தென்னிந்தியாவிற்குப் பயன்: பெங்களூருவில் இந்த சேவை தொடங்குவதால், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு (குறிப்பாகச் சென்னை, கோவை, ஓசூர் மக்கள்), கேரளா மற்றும் ஆந்திர மாநில மக்களும் எளிதாகப் பயனடையலாம். வணிகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி: பெங்களூருவில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களின் ஊழியர்களுக்கும், சுவிட்சர்லாந்தின் இயற்கை அழகைக் காணத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த அறிவிப்பு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்

    error: Content is protected !!