திரைத்துறையில் சாதிப்பதற்கு முன் பாரதிராஜா அரசு பணியில் இருந்தார். தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் சிறிது காலம் சுகாதார ஆய்வாளராக (Health Inspector) அவர் பணியாற்றியுள்ளார். பின்னர் சினிமா மீதான அதீத காதலால் அரசு வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வந்தார். அப்படி வந்து அவர் எடுத்த முதல் படம் தான் ’16 வயதினிலே’. இதற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
