திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கு சென்ற மாணவியிடம் ஆபாச சைகைகளை காட்டி, முதியவர் ஒருவர் தொல்லை கொடுத்ததாக அவரது தாய் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, முதியவர் மீது வழக்குப்பதியும் நடவடிக்கையில் போலீஸ் ஈடுபட்டுள்ளது. சமீபமாக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது பெற்றோருக்கு கவலையை தந்துள்ளது
