திருவண்ணாமலை அருகே கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சரஸ்வதி என்ற மூதாட்டியை மர்ம நபர்கள் வழிமறித்து கொள்ளையடித்துள்ளனர். அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்ததுடன், காதை அறுத்து கம்மலையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனை மூதாட்டி தடுத்தபோது, கொள்ளையர்கள் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரது கழுத்து மற்றும் தலையில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மூதாட்டியின் தங்கச் சங்கிலி பறிப்பு.. தலை மற்றும் கழுத்தில் கத்திக் குத்து
