மூடுபனி’ திரைப்படத்தில் இடம்பெற்ற “என் இனிய பொன் நிலாவே” பாடல் தொடர்பான உரிமை விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பாடலின் அசல் ஒலிப்பதிவு மற்றும் பாடல் வரிகளில் இளையராஜாவுக்கு உரிமை இல்லை என்ற டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. பாடலின் உரிமை தங்களிடம் இருப்பதாக சரிகம நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
“என் இனிய பொன் நிலாவே” பாடல் விவகாரம்.. இளையராஜாவுக்கு பின்னடைவு
