Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்

ரேஷன் கார்டுகளில் இறந்த நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக வந்த புகாரின் பேரில் ரேசன் கார்டுகளில் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகை பதிவினை உறுதி செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

சில மாவட்டங்களில் ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கப்படாமல் உள்ளது. மேலும் விரல் ரேகை இல்லாததும் தொடர்ந்து சிலர் பயன்பெற்று வருகின்றனர். இதை தடுக்க ஆதார் எண் இணைக்கவும், விரல்ரேகையை பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ரேஷன் அட்டைகளில் பெயர் மாறியுள்ளதால் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் இறந்த நபர்களின் ஆதார் எண் விவரங்களை பெற்று அதனை அறிக்கையாக அனுப்பி வைக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலை காரணமாக வெளியூர்களில் தற்காலிகமாக வசிப்பவர்களும் வரும் 25ம் தேதிக்குள் கைவிரல் ரேகையைப் பதிவு செய்வது அவசியம். ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்கவே இந்த பயோமெட்ரிக் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இறந்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை, வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து ரேஷன் கார்டில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!