அர்ஜெண்டினா: நடுவானில் 22 வயது மாணவிக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தபோது விமானத்தின் கதவை திறந்து திடீரென வெளியே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் விமான பயிற்சியாளர் லியாண்ட்ரோ (42) குதிப்பதற்கு முன் “உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்” என கூறியுள்ளார். எனினும் மாணவி சரியாக விமானத்தை தரையிறக்கி உள்ளார். லியாண்ட்ரோவின் இந்த விபரீதமான முடிவு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது
