Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொலை முயற்சி, கஞ்சா கடத்தல் வழக்குகளில் பெண் உட்பட 4 பேர் கைது!

கொலை முயற்சி, கஞ்சா கடத்தல் வழக்குகளில் பெண் உட்பட 4 பேர் கைது!

பொன்னேரி: சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரவுடி நிரேஷ்குமார் கடந்த 3ம் தேதி மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் பெண் ஒருவருடன் இருந்தபோது மர்ம கும்பல், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில், நிரேஷ்குமார் காயமடைந்தார். பின்னர் தீவிர சிகிச்சைக்கு பிறகு மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். போலீசார், வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இதில், அத்திப்பட்டை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சங்கர் (எ) நாய் சங்கருடன் கள்ளக்காதல் விவகாரத்தில், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நிரேஷ்குமாரை வெட்டியது தெரியவந்தது. இது சம்பந்தமாக ஆவடி காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் இணை ஆணையர் சிவகுமார், துணை ஆணையர் மகேஸ்வரி, உதவி ஆணையர் ரூபன் மேற்பார்வையில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம், எஸ்ஐ வீரக்குமார் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி விக்னேஷ் (28) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பவானி (27), கிஷோர் (28), சங்கர் (28), ராகுல் டேவிட் (27) ஆகியோரை கைது செய்தனர். இதில் போலீசார் துரத்தியபோது தப்பி ஓட முயன்றபோது அத்திப்பட்டு மேம்பாலத்தில் கீழே விழுந்ததில் சங்கர், ராகுல் டேவிட் ஆகியோருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுகட்டு போடப்பட்டது. கைததான குற்றவாளிகளிடம் இருந்து 4.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

error: Content is protected !!