Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் கட்டணமின்றி அனுமதி

ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் கட்டணமின்றி அனுமதி

முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வண்டலூர், வேலூர் மற்றும் சேலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் ஜூன் 21, 22-ம் தேதிகளில் அனுமதி இலவசம் என வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் அறிவித்துள்ளார்.

முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வண்டலூர், வேலூர் மற்றும் சேலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் ஜூன் 21, 22-ம் தேதிகளில் அனுமதி இலவசம் என வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் அறிவித்துள்ளார். இதேபோல் வேலூர் அமிர்தி, சேலம் குரும்பட்டி போன்ற உயிரியல் பூங்காக்களில் அனைவரும் நுழைவுக் கட்டணம் இன்றி சென்று வரலாம் என வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் அறிவித்துள்ளார். நானும் எனது சகோதரரும் இணைந்து நடத்தும் ‘வாழ்முனி நாயக்கர் அறக்கட்டளை’ இந்த 2 நாட்களுக்கான பார்வையாளர்கள் நுழைவு கட்டணத்தை முழுமையாக ஏற்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணமாக 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 200 ரூபாய், 5 – 12 வயதுள்ள சிறுவர்களுக்கு 50 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது. ஒரு நாளில் குறைந்த பட்சம் 5,500 பேர் வருகிறார்கள் எனில், குறைவாக கணக்கிட்டாலும் சுமார் 10 லட்ச ரூபாய் வருமானம் வருகிறது. இரண்டு நாட்களில் 20 லட்சம் ஆகிறது. இங்கே மேலும் சில உயிரியல் பூங்காக்களிலும் இரண்டு நாட்களுக்கு இலவசம் எனில், எப்படியும் சுமார் 1 கோடி அளவுக்கு அமைச்சருக்கு செலவாகும் என்பது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!