கள்ளக்குறிச்சி உளுந்தூர் பேட்டை அருகே உயர் மின்விளக்கு கோபுரம், அரசுப் பேருந்தின் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி ஓடினர். நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில், மின்வாரிய ஊழியர்கள் வந்து மின் கம்பத்தை மீட்டு நிலைமையை சீர் செய்தனர். மழை மற்றும் பலத்த காற்று காரணமாக உயர் மின் விளக்கு கோபுரம் சாய்ந்துள்ளது. அவ்வழியாக பாதசாரிகளோ, இருசக்கர வாகன ஓட்டிகளோ செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அரசு பஸ்சின் மீது விழுந்த உயர் மின் விளக்கு கோபுரம்- பரபரப்பு
