விஜய் டிவி சீரியல் நடிகை மோனிஷா தனது கணவரால் அனுபவித்த கொடுமைகள் குறித்து ‘செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். தன் அனுமதியின்றி பெட்ரூமில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்ததுடன், அதை நண்பர்களிடம் காட்டி மிரட்டியதாகவும், 100 சவரன் நகைகளை இழந்துதான் விவாகரத்து பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவங்களால் தற்போதும் பயத்துடன் வாழ்ந்து வரும் மோனிஷாவுக்கு இணையத்தில் ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
