Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே CSI மே.பள்ளியில் சத்துணவு சமையலறை கட்டிடம் திறப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் சி.எஸ்.ஐ.மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு சமையல் அறை புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. தென்னிந்திய திருச்சபை திருச்சி – தஞ்சை திருமண்டல பேராயர் எஸ்.சாமுவேல் ராஜதுரை திறந்து வைத்தார். மறை மாவட்டத்தலைவர் சகரியா கிருபாகரன் தலைமை வகித்தார். குருத்துவ செயலாளர் ராஜா மான்சிங் முன்னிலை வகித்தார். பள்ளித் தாளாளர் இம்மானுவேல் வாழ்த்துரை வழங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் ஏசுகுமார் விழா ஏற்பாடுகளை செய்தார்.விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!