கோடை வெயிலும் ஏழுமலையான் தரிசனத்திற்காக திருப்பதியில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
கோடை வெப்பத்தின் காரணமாக அங்கு பக்கதர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் குளிர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வைகுண்ட வரிசை வளாகம் – 2, அருங்காட்சியக வளாகம் மற்றும் நாராயணகிரி பூங்கா ஆகிய இடங்களில் நிழல் தரும் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக லட்டு விற்பனையகங்கள் மற்றும் அதிக பக்தர்கள் கூடும் பகுதிகளில் குளிர் பந்தல்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பாட்டா கங்கம்மா கோயில் வட்டத்திலுருந்து வெளிவட்ட சாலை வரை தற்காலிகக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பக்தர்களுக்கு சுமார் 7,500 அறைகளும் ஐந்து யாத்ரீகர் தங்குமிட வளாகங்களும் உள்ளன. கடந்த 5 நாட்களில் 4,32,213 பக்தர்கள் இறைவனை தரிசித்துள்ளனர் என குறிப்பிடத்தக்கது. நேற்று ஒரே நாளில் சுமார் 80,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து அதிகபட்ச எண்ணிக்கை எட்டியுள்ளனர்.
