சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா.அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரியானா பூங்காவை அழகுபடுத்தும் பொருட்டு, இந்தியா சார்பில் அரிய வகை வெள்ளை ஆண் மயில் உட்பட 5 மயில்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக கடந்த 1981-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி டெல்லி உயிரியல் பூங்காவிலிருந்து 2 மயில்களை அங்கு அனுப்பி வைத்திருந்தார். தற்போது சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவின் இந்த பரிசளிப்பு மூலம் ஐ.நா.வளாகத்தில் மயில் வளர்க்கப்படும் பாரம்பரியம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
