தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனடியாக உயர்த்தி அறிவிக்காவிட்டால், வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் தீவிரப் போராட்டம் நடத்தப்படும் என்று ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. எரிபொருள் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துள்ள சூழலில், பல ஆண்டுகளாக மாற்றப்படாத மீட்டர் கட்டணத்தைச் சீரமைக்கக் கோரி இப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
