Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உணவு வழங்குவதில் முறைகேடா?

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உணவு வழங்குவதில் முறைகேடா?

நோயாளிகளுக்கான முட்டை, ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா?

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் ஊழியர்களின் செயல்பாடுகள் குறித்து புகார் எழுந்துள்ளது.

மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவில் உள்ள 701-வது வார்டு மற்றும் 2-வது தளத்தில் பணியாற்றும் கோவிந்தராஜ் என்பவர் தொடர்பாக பல்வேறு புகார்கள் இருப்பதாக, பாரத் இந்து முன்னணி மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஈ. செல்வராஜ் என்ற ஆர்.டி.ஐ. செல்வம், சுகாதாரத்துறை அமைச்சரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

குறிப்பாக உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் முட்டை, ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ள புகார்தாரர், சில நோயாளிகளிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால், நோயாளிகளுக்கான உணவு மற்றும் அடிப்படை மருத்துவ சேவைகள் முறையாக கிடைக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும், தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
என்பது தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!