Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காஞ்சிபுரம் நகைக்கடையில் 3வது நாளாக ஐடி சோதனை

காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் பிரபல நகைக்கடையில், வருமான வரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து 3ஆவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் நகருக்குட்பட்ட நகைக்கடையில், ஒன்றிய அரசின் வருமான வரித் துறையினர் நேற்று முன் தினம் மாலை 5:00 மணிக்கு சோதனை செய்ய தொடங்கினர். கடையில் கூடுதல் ஆணையர் தலைமையில் 15க்கும் மேற்பட்ட வருமான வரித் துறையினர் தொடர்ந்து சோதனையானது நடைபெற்று வருகிறது.

நகைக்கடையிலும், அருகே உள்ள உரிமையாளர் வீட்டிலும் 15க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வீட்டில் நடைபெற்ற சோதனை 30 மணி நேரத்திற்கு பிறகு நேற்று நள்ளிரவு சோதனை நிறைவு பெற்றது.

இந்த சோதனையில் கணக்கில் வராத முக்கிய ஆவணங்கள் சில கைபற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணகளின் விவரங்கள், மேலும் கணக்கில் வராத நகைகள் ஏதும் கைப்பற்றப்பட்டிருக்கிறதா என்பது குறித்த கூடுதல் தகவல்கள் தெரியவரும் என வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!