Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டூரிஸ்ட் பஸ்சில் ஓடிய `ஜனநாயகன்’ படம் – டிரைவர் மீது வழக்கு

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் டிராவல்ஸ் வாகனத்தில் சென்றவர்கள் ஜனநாயக திரைப்படத்தை பார்த்துக் கொண்டு சென்றதால் தமிழக வெற்றி கழகத்தினர் வாக்குவாதம் செய்த காட்சி சமூக வலைதளங்களின் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் டிராவல்ஸ் வாகனத்தில் எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது டீ குடிப்பதற்காக சங்ககிரி குப்பனூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பேக்கரி முன்பு வாகனத்தை நிறுத்தி உள்ளனர். அப்போது சுற்றுலா வாகனத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகம் திரைப்படம் காட்சிப்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது பேக்கரி முன்பு நின்று கொண்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சேலம் வட மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆதிகேசவன், நகர செயலாளர் மணிகண்டன் மற்றும் கழக நிர்வாகிகள் டிராவல்ஸ் வாகனத்தில் ஏறி சென்று உறுதி செய்தனர்.

அதன் பிறகு ஓட்டுனரை அழைத்து தமிழக முதல்வர் நடித்துள்ள திரைப்படம் எனவும், 500 கோடி முதலீடு செய்து எடுத்துள்ள திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் ஏன் வாகனத்தில் காட்சிப்படுத்தீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பேருந்தில் இருந்த காரணத்தினால் அவர்களை தமிழக வெற்றி கழகத்தினர் எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தமிழக வெற்றி கழக நிர்வாகி மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சங்ககிரி போலீசார் சுற்றுலா வாகன ஓட்டுநர் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!