உத்தரப் பிரதேசம் கான்பூர் தேஹாத் மாவட்டம் அக்பர்பூர் கிராமத்தில் வாலிபர் ஒருவருக்கும் மனைவிக்கும் இடையே பல ஆண்டுகளாக குடும்ப தகராறு இருந்துள்ளது. பிரிந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட அந்த வாலிபருக்கு ஆறுதல் சொல்ல மாமியார் அடிக்கடி வந்தார். “மகள் மூர்கக்காரி” என மகளுக்கு எதிராக பேசி மருமகனுக்கு ஆதரவாக நின்றார்.
ஆறுதலாக தொடங்கிய பேச்சு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த உறவு 4 ஆண்டுகளாக ரகசியமாக நீடித்துள்ளது. விவகாரம் வெளியே தெரிந்தால் அவமானம் ஏற்படும் என பயந்த ஜோடி, சில நாட்களுக்கு முன் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு ஓடினர். நேராக கான்பூர் நகர் கோர்ட் சென்று வயது சான்றிதழ், சம்மதக் கடிதம் கொடுத்து பதிவுத் திருமணம் செய்தனர்.
கோர்ட் வளாகத்திலேயே மாலை மாற்றி, திருமண சான்றிதழுடன் வீடியோ வெளியிட்டனர்.வீடியோவில் அவர்கள் கூறியது: “நாங்கள் சட்டப்பூர்வமாக, பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளோம். சமூகம் எங்களை ஏற்க வேண்டும். மக்கள் ஆசி வழங்க வேண்டும்”. திருமணத்துக்கு பின் தேனிலவுக்கு சென்றுவிட்டதாக தகவல்.சமூக எதிர்வினை: தாய்-மகன் உறவாக பார்கப்படும் மாமியார்-மருமகன் பிணைப்பை உடைத்த இச்சம்பவத்தை நெட்டிசன்கள் “கலியுகத்தின் உச்சம்”, “சமூக ஒழுக்கச் சீர்கேடு”, “காதலுக்கு கண்ணில்லை” என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்
