Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே பல்வேறு நலத்திட்ட பணி… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடவூர் ஒன்றிய பகுதிகளில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 56 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. கீழப்பகுதி ஊராட்சி மைலம்பட்டியில் 292 மீட்டர் தூரம் மண்சாலையை ரூ.16.50 லட்சம் மதிப்பில் புதிய மண் சாலை அமைக்கும் பணிக்கும், வெள்ளப்பட்டி ஊராட்சி பாறைப்பட்டி ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய நாடக மேடை கட்டும் பணிக்கும் மற்றும் பொன்னி பட்டியில் ரூ.7 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்டும்

பணிக்கும், தென்னிலை ஊராட்சி மஞ்சபுளிப்பட்டியில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் புதிய நாடக மேடை கட்டும் பணிக்கும், தேவர்மலை ஊராட்சி அய்யம்பாளையத்தில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் புதிய நாடகமேடை கட்டும் பணிக்கும், ஆதனூர் ஊராட்சி கீழமேட்டுப்பட்டியில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் புதிய நாடகமேடை கட்டும் பணிக்கும் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி பூமி பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வின்போது திமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், கீழப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் ஷாஜகான், வெள்ளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், தென்னிலை ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள், தேவர்மலை ஊராட்சி மன்ற தலைவர் நக்கீரன், ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பூமா உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!