Skip to content

கரூரில் அருள்மிகு ஸ்ரீ வாகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத பஞ்சமி திதியை முன்னிட்டு ஆலயத்தில் வாராகி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன்,நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து வாராகி அம்மனுக்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு , சுவாமிக்கு தூப தீபங்கள் கட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெற்ற வாராகி அம்மன் பஞ்சமி திதி சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!