Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கவின் ஆணவக்கொலை வழக்கு.. காதலியின் தாயார் கைது

திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில், தற்போது முக்கிய திருப்பமாக காதலியின் தாயாரும், காவல் சாற்பு ஆய்வாளருமான (SI) கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கை: தலைமறைவாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரியை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே கைதானவர்கள்: இந்த கொடூரக் கொலையில் தொடர்புடைய கொலையாளி சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகிய மூவரும் ஏற்கெனவே போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காதல் விவகாரத்தால் ஒரு இளம் பொறியாளர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல் துறையைச் சேர்ந்த ஒருவரே (தாயார்) தலைமறைவாக இருந்து பின் கைது செய்யப்பட்டிருப்பது இப்பகுதியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!