2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒட்டி தமிழகத்தில் மண்டல அளவிலான பாக முகர்வர்கள் மாநாட்டை தி.மு.க நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கோவை, நீலாம்பூரில் நடைபெற்ற மேற்கு மண்டல திமுக வாக்குசாவடி குழுவினர் பயிற்சி மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் முதல்வர் ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பாராட்டி பேசினார். அவர் பேசியதாவது.. வரலாற்றில் மிக முக்கியமான ஊர் கோவை. மேற்கு மண்டல வாக்கு பயிற்சி கூட்டத்தையே மாபெரும் மாநாடு போலவே சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார் நம் ஆருயிர் சகோதரர் செந்தில்பாலாஜி. இவருடைய இந்த ஆற்றல்தான் எதிரிகளின் தூக்கத்தையே கெடுக்கிறது.
செந்தில்பாலாஜிக்கு கொடுத்த குடைச்சல்களை வைத்தே இவர் எந்த அளவுக்கு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் என்கிறார் என்பது தெரியும். செந்தில்பாலாஜி அனுபவித்த துயரங்கள் போல் வேறு யாரும் அனுபவித்திருக்க மாட்டார்கள்.
மிரட்டலுக்கு பயந்து முதுகு வளைந்து கும்பிடு போடுமபவர்களுக்கு இடையே இவர் எந்த மிரட்டலுக்கும் பயந்து அடிபணியவில்லை. நெருக்கடிக்கு தலைவணங்காமல் நெஞ்சுறம் செயல்படுகிறார் செந்தில்பாலாஜி. கழகத்திற்கும், தலைமைக்கும் உண்மையாக உழைத்து கொடுக்கிறார். அந்த அளவிற்கு சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கக் கூடிய செந்தில்பாலாஜிக்கும், அவருக்கு துணை நிற்கக்கூடிய கழக நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டு, வாழ்த்துக்கள் என்று இவ்வாறு பேசினார்.
