கோவை சரவணம்பட்டி வடக்கு விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா.
இவர் திருச்சி செம்பட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரை காதலித்தார்.
இவர் சூர்யாவின் மாமன் மகள் ஆவார். பின்னர்த் திருமண ஆசை காட்டி அவரைத் திண்டுக்கல் வடமதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டில் வைத்து பாலியல் உறவு மேற்கொண்டார். இதில் அந்த இளம் பெண் கர்ப்பம்மடைந்தார். பின்னர் இரு குடும்பங்களின் ஒத்துழைப்புடன் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர்த் திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையில் உள்ள வீட்டில் கணவன் மனைவியாகக் குடும்பம் நடத்தி வந்தனர். அதன் பின்னர்ச் சூர்யாவுக்குத் தனது சகோதரி தோழி வினிதா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது .அதைத் தொடர்ந்து அவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டு கோயம்புத்தூரில் வசித்து வந்தனர். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் தனது மாமனார் கந்தசாமி மற்றும் உறவினர்கள் குமார், முத்துலட்சுமி, அனிதா, ஸ்ரீ கமலதாரணி ஆகியோரிடம் நியாயம் கேட்டார்.
ஆனால் அவர்கள் யாரும் அவரது நியாயத்தைக் கேட்காமல் அந்த இளம் பெண்ணைப் பெற்றோர் வீட்டுக்கு திருப்பி அனுப்பினர் இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் கணவர் சூர்யா அவரது இரண்டாவது மனைவி வினிதா மற்றும் உறவினர்கள் குமார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய முதியவர் உள்பட 2 பேர் கைது
திருச்சி உறையூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் திருச்சி புத்தூர் தெற்கு திரௌபதி அம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனைத்தபோது குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் குட்கா பொருட்களை கடத்திச் சென்ற திருச்சி காந்தி மார்க்கெட் வடக்கு தாராநல்லூர் வசந்த நகர் பகுதியில் சேர்ந்த தியாகராஜன் (வயது 70 ), உறையூர் நவாப் தோட்டம் காவேரி நகர் 1-வது கிராஸ் பகுதியை சேர்ந்த மணிக்குமார் (26) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.
பின்னர் 14 கிலோ ஹான்ஸ் விமல் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் இதன் மதிப்பு ரூபாய் பத்தாயிரம் ஆகும் போலீசார் பின்னர் மணிக்குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தியாகராஜனை கைது செய்து நீதிமன்ற ஜாமீனில் விடுவித்தனர்.இந்த சம்பவத்தில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது இது தொடர்பாக உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
