மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் 29 பேருடன் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பலரை காணவில்லை.
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் பர்கி அணைப்பகுதியில் இந்த விபத்து நடந்தது. அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றியதால் படகு கவிழ்ந்தது விபத்துகுள்ளானது. தகவல்அறிந்த உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 15 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மற்றவர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
