Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக தலைவர் விஜய் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு

சென்னையில் நேற்று தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் ஆகிய மூன்று தொகுதிகளில் பிரசாரம் செய்ய, விஜய்க்கு அனுமதி தரப்பட்டு இருந்தது. அதன்படி, நீலாங்கரையில் தன் வீட்டில் இருந்து புறப்பட்டு, தி.நகர் நியூ போக் சாலைக்கு மாலை 4:10 மணிக்கு வந்தார்.

வேனில் நின்றபடி கையசைத்த விஜய், ஐந்து நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பி விட்டார்.அடுத்தபடியாக, ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட வள்ளுவர் கோட்டத்தில் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கப்பட்டது. ஆனால், அங்கும் விஜய் பேசாமல், வேனில் நின்றபடி கையசைத்து சென்றார்.

தற்போது தி.நகரில் தேர்தல் பிரசாரத்தில் ரோடு ஷோ நடத்திய விஜய் விதிகளை மீறியதாக புகார்கள் எழுந்தது.அதன் படி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக தவெக தலைவர் விஜய் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பறக்கும் படை அதிகாரி சந்தோஷ்குமார் அளித்த புகாரின்பேரில் தவெக வேட்பாளர் ஆனந்த், தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்புனு ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

error: Content is protected !!