தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் அரசுப் பேருந்தின் பின்புறத்தில் நபர் ஒருவர் ஆபத்தான முறையில் ஒட்டிக்கொண்டு பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தின் பின்பக்க ஏணியை கைகால்களால் கெட்டியாகப் பிடித்தபடி, அந்த நபர் ‘ஸ்பைடர் மேன்’ போலத் தொங்கியுள்ளார். கார் பயணிகள் எடுத்த இந்த அதிர்ச்சி வீடியோ வைரலாகி வரும் நிலையில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
