Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை நகராட்சிக்கு ரூ.7கோடி சொத்து வரி பாக்கி… ஆலோசனைக் கூட்டம்…

மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு சொத்து வரி, காலிமனை வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் வரி என பல்வேறு இனங்களில் ஆண்டுக்கு மொத்தம் ரூ.21கோடி வரி. இதில் சொத்து வரி ரூ.8. கோடி ஆகும் . இது வரை வசூலானது ரூ.3 கோடி ஏற்கனவே பாக்கி உள்ள ரூ.4 கோடி சேர்த்துமொத்தம் ரூ.7 கோடி சொத்து வரி நிலுவையில் உள்ளது. பாதாள சாக்கடை சீரமைப்பு, சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு நகராட்சியில் நிதி பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை நகராட்சிக்கு சொத்து வரி, அதிக அளவில் நிலுவையில் வைத்துள்ளவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த நகராட்சி அதிகாரிகள் நிலுவையின்றி வரிகளை செலுத்த அறிவுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!