சென்னை மாதவரம் ரவுண்டானாவில் பைக் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், தாய் ஷர்மிளா மற்றும் அவரது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த கணவர் நித்யானந்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கோர விபத்து குறித்து மாதவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
