நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,377 ஆக உயர்ந்துள்ளதுடன், இதுவரை 13,656 பேர் மீட்பு குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 5,130 பேரை தேடும் பணி நேபாள இராணுவத்தின் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடையாளம் காணப்படாத 1,147 உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க டிஎன்ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
