அதிமுக முன்னாள் சி.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக வென்றார். எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி + திமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்தது உள்ளிட்டவைகளை ஏற்க மனமின்றி அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.அதன் பின் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமான இணைப்பு விழாவை நடத்தி தவெக-வில் இணைந்தார் சி.விஜயபாஸ்கர்.
முதல்வர் தங்களுடன் அன்பாக பாசமாக பேசியது குறித்து சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் விவரித்து சிலாகித்தார். இந்த நிலையில் அவர் எக்ஸ் வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில்,
வரலாறு எழுத பலர் வருவார்கள்…
வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள்!
தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை
மாற்றத்தின் ஆட்சியாக மலரச் செய்து,
புதிய அரசியல் வரலாற்றை படைத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நெஞ்சம் நிறைந்த தருணம்!
வெற்றித் தலைவர் பாதையில்…
மக்களுக்கான பயணம்…
அதே உறுதியோடு தொடரும்!
என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
