Skip to content

கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

கரூர் மாநகரில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறையாகிய கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்  பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக கொடிமரத்திற்கு வண்ண வண்ண மலர் மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து வரும் 9 -ம் தேதி திருக்கல்யாண உற்சவம் அதனைத் தொடர்ந்து 11-ம் தேதி  தேரோட்டம் நடைபெற உள்ளது.

error: Content is protected !!