Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய பிரேமலதா விஜயகாந்த்

மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய பிரேமலதா விஜயகாந்த்

விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (Chief Minister’s Breakfast Scheme) செயல்படுத்தப்பட்டு வரும் விதம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான (MLA) பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

பின்னர் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சமையல் அறையின் தூய்மை

மற்றும் உணவு தயாரிப்பு முறைகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பள்ளிப் பிள்ளைகளிடம் திட்டத்தின் பயன்கள் குறித்தும், உணவு நன்றாக இருக்கிறதா என்றும் அன்போடு கேட்டறிந்தார்.

வெறும் ஆய்வோடு நிறுத்தாமல், பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவை அவரும் பகிர்ந்து சாப்பிட்டார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவர், அரசுப் பள்ளி மாணவர்களுடன் சரிசமமாக அமர்ந்து உணவருந்தி, திட்டத்தின் தரத்தை உறுதி செய்தது அப்பகுதி மக்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

error: Content is protected !!