Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கைதி தப்பி ஓட்டம்.. முதியவரின் செல்போன் பறிக்க முயற்சி.. திருச்சி க்ரைம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

முதியவரிடம் செல்போன் பறிக்க முயன்ற நபர் கைது

திருச்சி சுப்பிரமணியபுரம் புது பாண்டியன் தெருவை சேர்ந்தவர் முடியப்பன் பாஸ்கர் (வயது67) இவர் கடந்த 17 ந்தேதி தன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அவரது பின்னே வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவரிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார் உடனடியாக பாஸ்கர் அவரை கையும் களவுமாக பிடித்து கே கே நகர் போலீசாரிடம் ஒப்படைத்தார் போலீசார் விசாரணையில் அவர் திருச்சி ஜே ஜே நகரை சேர்ந்த கென்னடி (வயது 43) என்பது தெரிய வந்தது இதை எடுத்து போலீசார வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பருப்பு கடையில் ரூ78 ஆயிரம் பருப்பு வகைகள் திருட்டு

திருச்சி காந்தி மார்க்கெட் நரசிம்மலு நாயுடு தெருவை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 31) இவர் அதே பகுதியில் பருப்பு கடை நடத்தி வருகிறார் கடந்த ஒன்பதாம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார் மீண்டும் கடந்த 10ந் தேதி கடை திறந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது மேலும் கடந்த 17ஆம் தேதி சரக்கை சோதனை செய்தபோது அதில் இருந்த 10 கிலோ பாதாம் 10 கிலோ முந்திரி என மொத்தம் ரூபாய் 78 ஆயிரம் மதிப்புள்ள பருப்பு வகைகள் திருடு போனது தெரியவந்தது இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் திருடிய இரண்டு வாலிபர்கள் கைது

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி சேர்ந்தவர் நவமணி (வயது 56) இவர் கடந்த 14 ந் தேதி வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டிற்குள் புகுந்து கட்டிலுக்கு கீழே இருந்த ரூபாய் 20 ஆயிரம் பணத்தை திருடிக் கொண்டு சென்றனர். இதுகுறித்து பாலக்கரை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து அதே பகுதி சேர்ந்த அஜித்குமார் (வயது 22) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் அவருடன் இருந்த 16 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.

புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

திருச்சி ஏர்போர்ட் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக ஏர்போர்ட் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது தொடர்ந்து போலீசார்ங்கு சோதனை நடத்தினர் அப்போது அங்கு புகையிலைப் பொருட்கள் விற்ற திருச்சி வரகனேரி வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா முகமது (வயது 41) என்ற வாலிபரை கைது செய்தனர் அவரிடம் இருந்து ஒன்பது கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, அதோடு ரூபாய் 16 ஆயிரம் பணம் மற்றும் ஒரு டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது போலீசார் ராஜா முகமது ஜாமினில் விடுவித்தனர்.

திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

திருச்சி பாலக்கரை சத்திரம் பகுதியில் போதை மாத்திரையில் நடப்பதாக பாலக்கரை போலீசார் கடந்த 17 ந்தேதி தகவல் கிடைத்தது தொடர்ந்து போலீசாரங்கள் சோதனை நடத்தி போதை மாத்திரை விற்ற அதே பகுதியில் சதீஷ்குமார் (வயது35) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தல் அவரிடம் இருந்து பத்து போதை மாத்திரைகள் பூசி பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு சம்பவம்
போலீஸ்காரர் கையை கடித்த கைதி

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் சேர்ந்தவர் விஜய் (வயது29) இவர் திருட்டு வழக்கில் திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுதிருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக போலீசார் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் திடீரென ஊசியை முழுங்க முயன்றார்.இதை யடுத்து உடனடியாக கான்ஸ்டபிள் வேல்முருகன் (வயது37 )அவரது தொண்டையிலிருந்து ஊசியை எடுக்க முயன்றார் அப்போது விஜய் போலீஸ்காரர் வேல்முருகனின் கையை கடித்து காயப்படுத்தி உள்ளார் இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

கேரள மாநிலம் கொல்லம் பாரலூர் தொட்டிக்கார கோணலை சேர்ந்தவர்
அபிஜித் (வயது 23) இவர் திருட்டு வழக்கில்
திருச்சி இருப்பு பாதை போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தார்.கடந்த 16ஆம் தேதி அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அப்போது ஸ்கேன் எடுக்க ஸ்கேன் மையத்திற்கு அழைத்துச் சென்றபோது அபிஜித் போலீசாரை தள்ளிவிட்டு அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றார் இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கை தி அபிஜித்யை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

திருச்சி சஞ்சீவி நகர் பாரிஜாத மலர் தெருவை சேர்ந்தவர் ஜெயா (வயது60) இவர் கடந்த 17ஆம் தேதி அப்பகுதியில் உள்ள சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார் அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி ஜெயா கழுத்தில் இருந்த நான்கு பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றனர் இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


நூதன முறையில் ஆன்லைனில் ரூபாய் 40 ஆயிரம் மோசடி


திருச்சி அரியமங்கலம் சீனிவாசன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது47) இவர் அப்பகுதியில் பொது சேவை மையம் நடத்தி வருகிறார் கடந்த ஐந்தாம் தேதி இவரது கடைக்கு வந்த சில மர்ம நபர்கள் அவரிடம் அவசர தேவைக்காக ரூபாய் 40 ஆயிரம் பணம் கேட்டனர் அந்த 40 ஆயிரம் பணத்தை அவரது வங்கி கணக்கில் இனிய பரிமாற்றல் வழியாக அனுப்புவதாக கூறி 40000 வாங்கிச் சென்றனர் தொடர்ந்து அவர்கள் பணத்தை அனுப்பாமல் வடிவேலை ஏமாற்றியது தெரிய வந்தது இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து பணத்தை மோசடி செய்து சென்ற நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!