Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

30 நிமிடத்தில் 6 பேரை கடித்து குதறிய வெறிநாய்!- பரபரப்பு

ஹரியானா மாநிலத்தில் தெரு நாய்களின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சோனிபட்டில் 6 மாதக் குழந்தையைப் பிட்புல் (Pitbull) நாய் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது ரோத்தக்கிலும் தெரு நாய் ஒன்று பொதுமக்களைக் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரோத்தக் ஓல்ட் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில், பெண் ஒருவர் தனது வீட்டின் அருகில் பணி நிமித்தமாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையோரத்தில் அமைதியாக அமர்ந்திருந்த தெரு நாய் ஒன்று, பெண் அவரைக் கடந்து செல்ல முயன்றபோது திடீரெனப் பாய்ந்து சென்று அவரது காலைக் கொடூரமாகக் கடித்துக் குதறியது. இதனால் வலியால் அலறிய அந்தப் பெண்ணின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், நாயை அடித்து விரட்டிப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்பகுதி மக்கள் தெரிவித்த தகவலின்படி, அந்த வெறிபிடித்த தெரு நாய் வெறும் 30 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 5 முதல் 6 பேரை நோக்கிக் பாய்ந்து சென்று கடித்துள்ளதாகக் கூறுகின்றனர். இதனால் அந்த குடியிருப்புப் பகுதி முழுவதும் கடும் பீதியும் அச்சமும் நிலவி வருகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவும், சாலையைக் கடக்கவும் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.

தெரு நாய் அமைதியாக அமர்ந்திருந்து திடீரெனப் பாய்ந்து தாக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஆபத்தான தெரு நாய்களை உடனடியாகப் பிடிக்கக் கோரியும் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!