அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே தலைவராக ராகுல் காந்தி விளங்குவதாகவும், அவரே நாட்டின் அடுத்த பிரதமர் என்பதில் இந்தியாவே தெளிவாக இருப்பதாகவும் காங்கிரஸ் MLA தாரகை கத்பர்ட் தெரிவித்துள்ளார். இது குறித்த கேள்விக்கு தலைமை செயலகத்தில் இன்று (செப்.2) பதிலளித்த அவர், அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என்பதை தமிழக CM விஜய்யே ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார் என கூறினார். மேலும், தவெக MLA-க்கள் ரசிகர் மனப்பான்மையில் பேசி வருவதாகவும், அவர்கள் அப்படி பேசுவதில் தவறில்லை என அவர் பேட்டியளித்தார்.
