இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் தவெகவில் இணைந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன். 1971 ல் கட்சியில் இணைந்தார். அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு, அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பின் தமிழக செயலாளராக பணியாற்றினார்.
நீண்ட காலமாக கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டிருந்த மகேந்திரன், 2015ல் நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய இதழான தாமரையின் ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியவர். மாநில துணை செயலாளராக இருந்த அவர், தனக்கு மாநில செயலாளர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அவரது எதிர் கோஷ்டியினர் வலுப்பெற்றதால் அவருக்கு அந்த பதவி கிடைக்கவில்லை. இதனால் தீவிர அரசியலில் இருந்து சில ஆண்டுகளாக ஒதுங்கியிருந்த மகேந்திரன், தற்போது தவெகவில் இணைந்துள்ளார். பொதுச்செயலர் ஆனந்த் முன்னிலையில் இன்று அவர் தவெகவில் இணைந்தார்.
விஜய் தலைமையிலான அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர் தவெகவில் இணைந்துள்ளார்.
