Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் வெளிநாட்டு முதியவர் காணாமல் போனதால் பரபரப்பு!

திருச்சியில் வெளிநாட்டு முதியவர் காணாமல் போனதால் பரபரப்பு!

மியான்மர் நாடு யாங்கூன் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 65) இவர் திருச்சியில் உள்ள ஒரு உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மியான்மர் நாட்டில் இருந்து தனது மனைவி வாசுகி உடன் கடந்த 15 ந் தேதி திருச்சிக்கு வருகை புரிந்தார். பிறகு கேகே நகர் பகுதியில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டில் இருவரும் தங்கி விட்டு நேற்று முன்தினம்திருச்சி கருமண்ட பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு மனைவி வாசுகி உடன் சென்றிருந்தார்.
இந்நிலையில் திருமணம் மண்டபத்தில் இருந்து முத்து திடீரென்று மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.இது தொடர்பாக வாசுகி செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன முத்துவை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!