கடலூர் முதுநகரில் 3 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக இரண்டு சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் அருகே மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கலாம் என தெரிவிப்பு. போராட்டம் நடத்திய உறவினர்களிடம் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.
