மேற்கு தொடர்ச்சி மலையில் வரலாற்று ரீதியாக பதிவு செய்யப்பட்ட தும்பி இனங்களில் கிட்டத்தட்ட 35% காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021 முதல் 2023 வரை 144 இடங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 143 தும்பி & ஊசித் தும்பி இனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இது நன்னீர் வாழ்விடங்களில் அதிகரித்து வரும் அழுத்தத்தையும், சூழலியல் சீர்குலைவையும் காட்டுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
