Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி தபால் நிலையம் முற்றுகை – வாலிபர் சங்கத்தினர் குண்டுக்கட்டாக கைது!

திருச்சியில் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் எஸ் ஐ ஆர் விவகாரத்தில் இந்திய தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை கண்டித்தும் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் புதிய சட்டத் விதியை திரும்ப பெற வேண்டும் எனக் கூறியும் தலைமை தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது தலைமை தபால் நிலையம் முன்பு பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அங்கு
தேசிய கொடியுடன் வந்த வாலிபர் சங்கத்தினர் போலீசாரின் தடுப்புகளை மீறி தபால் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர் இதையடுத்து இரு தரப்பிற்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!