உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று (ஏப்ரல் 28, 2026) மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன. மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 69,93,601/-,தங்கம் 78.900 கிராம் , வெள்ளி 840.200 கிராம், மற்றும் 283 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்றன.
