Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கம் பகல் பத்து 3ம் திருநாள், வைர அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம்  ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா  நடந்து வருகிறது.  பகல் பத்து 3ம் திருநாளான இன்று   நாச்சியார் திருமொழிக்காக நம்பெருமாள் – மாம்பழ நிற பட்டு அணிந்து அஜந்தா சௌரிக் கொண்டை அணிந்து, கலிங்கத்துராய் கல் இழைத்த ஒட்டியாணம் கீரடத்தில் நெற்றி கட்டாக அணிந்து, வைர அபய ஹஸ்தம், கல் இழைத்த கோலக் கிளி; மார்பில் பங்குனி உத்திர பதக்கம், அடுக்கு

பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 6வட முத்து சரம் பின்புறம் அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம், புஜ கீர்த்தி,திருக் கைகளில் தாயத்து சரம் , ரத்தின திருவடி அணிந்து புறப்பாடு கண்டுருளினார்.  ஏராளமான பக்தர்கள் நம்பெருமாளை  தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!