Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விசாரணைக் வளையத்தில் ஸ்டாண்ட்-அப் காமெடி மாணவி: 5 பேர் கொண்ட குழுவை அமைத்து கல்லூரி நிர்வாகம் அதிரடி

மும்பை கே.இ.எம். மாநகராட்சி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருபவர் செஜல் பவார். இவர் சமீபத்தில் குருகிராமில் ஸ்டாண்ட்-அப் நகைச் சுவை கலைஞர் பிரனித் மோரே நடத்திய காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது செஜல் பவார் மருத்துவ கல்விக்காக பயன்படுத்தப்படும் ஆண் சடலங்களின் அந்தரங்க பாகங்கள் குறித்து அநாகரிகமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் அநாகரிக பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அவரின் பேச்சுக்கு கே.இ.எம். ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி நிர்வாகம் கண்டனம் தெரிவித்து இருந்தது.

இதேபோல போலீசாரும் அவருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர். இதற்கிடையே செஜல் பவார் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்தநிலையில் செஜல் பவார் கே.இ.எம். ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்துக்குள் நுழைய தடை விதித்து அந்த நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அவர் 15 நாட்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். இது தவிர செஜல்பவார் பேச்சு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த 5 நபர் கமிட்டியை அமைத்துள்ளது. விசாரணைக்கு அழைக் கும்போது விசாரணை கமிட்டி முன் அவர் ஆஜராக வேண்டும் என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

error: Content is protected !!