Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்று இரவு டில்லியுடன் மோதும் சன்ரைசர்ஸ்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 31வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்திய நம்பிக்கையுடன் சன் ரைசர்ஸ் அணி களமிறங்குகிறது. சென்னைக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து, 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் புது தெம்புடன் களமிறங்குகிறது.

அந்த அணியின் அபிஷேக் சர்மா, ஹென்றிச் கிளாசென் மற்றும் பந்துவீச்சாளர் இஷான் மாலிங்கா ஆகியோர் சிறப்பான பார்மில் இருப்பதால் இன்றைய போட்டிகள் சன்ரைசர்ஸ் கை ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணியை பொறுத்தவரை ஆர்சிபியை வீழ்த்திய உத்வேகத்தில் களம் காண்கிறது. அந்த அணியின் கே.எல்.ராகுல், ஸ்டப்ஸ், கேப்டன் அக்சர் படேல், நிகிடி நம்பிக்கை அளிக்கின்றனர். இரு அணிகளும் சம பலத்துடன் களம் இறங்குவதால் இன்று இரவு அனல் பறப்பது உறுதி.

error: Content is protected !!